உள்நாடுசூடான செய்திகள் 1

மன்னம்பிட்டி விபத்து : சாரதிக்கு விளக்கமறியல் – 11 பேர் மரணம்

(UTV | கொழும்பு) –

பொலனறுவை – மன்னம்பிட்டி பகுதியில் நேற்று (09) விபத்துக்குள்ளான பஸ்சை செலுத்திய சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலனறுவை நீதிவான் நீதிமன்றில் குறித்த நபர் இன்று (10) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 41 பேர் மன்னம்பிட்டிய மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆர்.ஏ.டீ மெல் மாவத்தையில் வாகன நெரிசல்

இலங்கை பாராளுமன்றத்தில் முதன்முறையாக தைப்பொங்கல் தினம் வைபவரீதியாக கொண்டாடப்பட்டது

editor

ITN இனது நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமனம்