இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த கோரிக்கை மீதான உத்தரவு எதிர்வரும் 14 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
மனுஷ நாணயக்கார சமர்ப்பித்த முன்பிணைக் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த அரசாங்கத்தின் போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடத்திய விசாரணைக்கு அமைய தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணைக் கோரி மனுஷ நாணயக்கார இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.