உள்நாடு

மனநோய்க்கு சிகிச்சைக்கு சென்ற நபர் – அதிவேக நெடுஞ்சாலையில் தவறான திசையில் காரை ஓட்டியதால் கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபென்ன சேவை நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கி செல்லும் பாதையில் காலி நோக்கி காரை செலுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மனநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக காலியில் இருந்து கொழும்பு நோக்கி காரில் பயணித்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிபென்ன சேவை நிலையத்தில் காரின் சாரதி கழிவறைக்குச் சென்ற போது குறித்த நபர், காரை எடுத்துக்கொண்டு இவ்வாறு தவறான பாதையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது [UPDATE]

மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் இலங்கைக்கு