அரசியல்உள்நாடு

மத்துகம பிரதேச சபை தவிசாளருக்கு பிணை

மத்துகம பிரதேச சபையின் செயலாளரைத் தாக்கியமை மற்றும் அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அச்சபையின் தவிசாளர் கசுன் முனசிங்கவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கு இன்று (08) மத்துகம பிரதான நீதவான் M.N.M. நாணயக்கார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சந்தேகநபரை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.

தனது கடமைக்கு தவிசாளர் இடையூறு விளைவிப்பதாக பிரதேச சபை செயலாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த முறைப்பாட்டிற்கு அமைய, சந்தேகநபரான தவிசாளரை கடந்த 2 ஆம் திகதி பிற்பகல் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்த நிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Related posts

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

இன்றும் மேலும் பலருக்கு கொவிட் உறுதி

நல்லடக்கத்தில் கலந்துகொண்ட பூனை!