உள்நாடு

மத்துகம பிரதேச சபையின் தவிசாளர் விளக்கமறியலில்

மத்துகம பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த பிரதேச சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தவிசாளர் இன்று (02) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேகநபரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமது கடமைகளுக்குத் தவிசாளர் இடையூறு விளைவிப்பதாகப் பிரதேச சபையின் செயலாளர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதற்கமைய, சந்தேகநபரான தவிசாளரை இன்று பிற்பகல் கைது செய்த பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

Related posts

பசில் நாடு திரும்பினார்

மஹாவலி ஆற்றை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்

editor

இலங்கை கிரிக்கெட் அணியிலும் கொரோனா