கிசு கிசு

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலக்க ஆலோசிக்குதாம்..

(UTV | கொழும்பு) –    மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

இதற்கு பதிலாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட உள்ளார்.

இந்திரஜித் குமாரசுவாமி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்த நிலையில், ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Related posts

நாட்டை விட்டு வெளியேற அவசியம் இல்லை

24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கை-360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்கு முடக்க நடவடிக்கை

அலரி மாளிகைக்குள் ஆயுத களஞ்சியங்கள்-அதன் பாதுகாப்பு ஆபத்தில்?