உள்நாடு

மத்திய வங்கியின் சட்டப்பிரிவு பணிப்பாளரின் மகன் தற்கொலை

(UTV|கொழும்பு) – கொழும்பு – புறக்கோட்டை – இலங்கை மத்திய வங்கி கட்டிட தொகுதியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொண்டவர், மத்திய வங்கியின் சட்டப்பிரிவு பணிப்பாளரின் மகன் என கண்டறியப்பட்டுள்ளது.

16 வயதுடைய குறித்த சிறுவன் தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்றவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலத்தை தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன், இன்று தனது தந்தையுடன் அவரது அலுவலகத்தில் இருந்ததாகவும், தந்தை கலந்துரையாடல் ஒன்றுக்காக அங்கிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில், அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக மத்திய வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, மேலும் இந்த விபத்து குறித்து கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு யார் பொறுப்புக் கூறுவது? – சஜித் பிரேமதாச கேள்வி

editor

விடுமுறை ரத்து இருப்பினும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்!