உள்நாடு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்புறத்தில் மோதி கார் விபத்து – ஒருவர் பலி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (27) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.

அதிவேக வீதியில் பயணித்த கார், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் விபத்து சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மேலும் இருவர் காயமடைந்த நிலையில் குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக விபத்து சம்பவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் பின் இருக்கையில் இருந்த பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அரச சேவை சம்பள உயர்வுக்காக 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

பாதுக்க பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி தாக்குதல் நடத்திய பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கைது

editor

நித்யா மேனனுக்கு கல்யாணமா?