சூடான செய்திகள் 1

மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது…

(UTV|COLOMBO) கடந்த இரு தினங்களாக மேல் மாகாணத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும்,கைது செய்யப்பட்டவர்களில் பல சட்டத்தரணிகள், வைத்தியர்கள் மற்றும் முன்னணி வர்த்தகர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன. இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை அடுத்த வரும் சில தினங்களில் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

களியாட்ட நிகழ்வுகளுக்கு சென்றவர்கள் மதுபோதையுடன் வாகனங்களை செலுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

 

Related posts

அரசப் பணியாளர்களது சம்பளம் அதிகரிப்பு

புறக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்