உள்நாடு

மண்ணினுள் மறைத்து பாலை மரக் குற்றிகளை கொண்டு சென்றவர் கைது!

மண்ணினுள் மறைத்து பாலை மரக் குற்றிகளை கொண்டு சென்றவர் கைது!
மண்ணினுள் மறைத்து வைத்து 146 பாலை மரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் கைதடி பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மரக்குற்றிகளை எடுத்துச் செல்ல பயன்படுத்திய டிப்பரும் பறிமுதல் செய்யப்பட்டது.
முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்ட வேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் பொ.ஜெயரூபன் தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

 ஏப்ரல் 10 முதல் விசேட பஸ் சேவை

ஆசன பட்டி சட்டம் கடுமையாகும் – மதிக்காத பேருந்துகளின் உரிமங்களை இரத்து செய்வோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 325 நபர்கள் கைது