உள்நாடு

மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு

நிலப்பரப்பின் தற்போதைய நிலைமை மற்றும் பெய்யும் மழையைக் கருத்தில் கொண்டு, இதற்கு முன் வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இதற்கு முன் வெளியிடப்பட்டிருந்த சிவப்பு அறிவிப்புகள் நீக்கப்பட்டு, கட்டம் 2 இன் கீழ் 3 மாவட்டங்களில் உள்ள 25 பிரதேச செயலகப் பிரிவுகளில் ‘அவதானமாக’ இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டம் 2 – அவதானமாக இருக்க வேண்டிய பகுதிகள்:

கண்டி மாவட்டம்: கங்க இஹல கோரளை, பூஜாப்பிட்டிய, உடபலாத, குண்டசாலை, கங்கவட்ட கோரளை, தெல்தோட்டை, மெததும்பறை, மினிப்பே, பன்வில, தொழுவ, யட்டிநுவர, ஹாரிஸ்பத்துவ, அக்குறணை, பாததும்பறை, தும்பனே, பஸ்பாகே கோரளை, உடநுவர, உடுதும்பறை மற்றும் பாதஹேவாஹெட்ட.

குருநாகல் மாவட்டம்: ரிதிகம.

நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்த, வலப்பனை, மத்துரட்ட மற்றும் நில்தண்டாஹின்ன

கட்டம் 1 – விழிப்புடன் இருக்க வேண்டிய பகுதிகள்:

கீழ்க்கண்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு கட்டம் 1 (Level 1) இன் கீழ் ‘விழிப்புடன்’ இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

பதுளை மாவட்டம்: ஊவ பரணகம, பதுளை, ஹாலி-எல, மீகஹகிவுல, ஹல்துமுல்ல, கந்தகெட்டிய, பசறை, சொரணாதோட்ட, எல்ல, வெலிமடை மற்றும் லுணுகலை.

குருநாகல் மாவட்டம்: மல்லவபிட்டிய, பொல்கஹவெல, மாவத்தகம மற்றும் அலவ்வ.

மாத்தளை மாவட்டம்: உக்குவளை, இரத்தோட்டை மற்றும் மாத்தளை.

நுவரெலியா மாவட்டம்: கொத்மலை, அம்பகமுவ கோரளை, நோர்வுட் மற்றும் தலவாக்கலை.

Related posts

கல்முனை கல்வி வலையம் : அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென தீர்மானம்

இன்று விசேட போக்குவரத்து ஒழுங்குகள்