சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

(UTV|COLOMBO) – கேகாலை, இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (20) மாலை 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, இம்புல்பே மற்றும் ஓப்பநாயக்க பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் கோகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப்பிரிவின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மோசடி

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்…

நீர்ப்பாசன, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட அரச அதிபர்களின் பங்கேற்புடன் உயர்மட்டக் கூட்டம்!