சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

(UTV|COLOMBO) – நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(23) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரத்தினபுரி, கேகாலை, பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீ ஓயா, தெதுரு ஓயா, கலா ஓயா போன்ற நீர்த்தேக்கங்களை அண்மித்துள்ள நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக திணைக்களத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஞ்சுள சமரகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், மஹவெலிக்கு உரித்தான பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மஹவெலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

மாணவர்களின் போஷாக்கு குறைப்பாட்டை நீக்க நடவடிக்கை

இன்றைய வானிலை…

முரணான தகவல்களால் ஈஸ்டர் தாக்குதலில் சந்தேகம் –  சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறார் ரிஷாட்