உள்நாடு

மண்சரிவு அபாயம் உள்ளது – கொழும்பு – கண்டி பிரதான வீதி கேகாலையில் மூடல்

கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு – கண்டி வீதி அந்தப் பகுதியில் மூடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது.

எனவே, கொழும்பு – கண்டி வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் கேகாலை பிரதேசத்தில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், அத்தியாவசிய தேவை தவிர வேறு காரணங்களுக்காக அந்தப் பகுதியினூடாகப் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

பல்கலைக்கழக நுழைவுப் பதிவு இன்றுடன் நிறைவு

களுத்துறையின் சில பகுதிகளில் 24 மணித்தியாலய நீர் வெட்டு

கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்பு!