உள்நாடு

மண்சரிவில் சிக்கி மூன்று பேர் மாயம்

(UTV | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினப்புரி எல்லே தேவாலய விகாரைக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில், மூவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து காணாமல் போன மூவரையும் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நிலையம் கூறியுள்ளது.

இதேவேளை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது.

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் ஆபத்து காணப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள், 100 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட மழை பெய்யும் பட்சத்தில் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

சூடுபிடித்துள்ள அரசியல் – மாகாண சபை தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வெளியிட்ட தகவல்கள்

editor

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு ? மனம் திறந்தார் சந்திரிக்கா

editor

பலத்த காற்று வீசக்கூடும் – வெளியான அறிவிப்பு

editor