சூடான செய்திகள் 1

மட்டக்குளி கதிரானவத்த வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வு

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் பாயிஸின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள மட்டக்குளி கதிரானவத்த வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கட்சியின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (13) கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கட்சியின் செயலாளர் நாயகம் எஸ் சுபைர்டீன், இலங்கை சீமெந்து நிறுவனத்தின் தலைவர் ரியாஸ் ஸாலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-ஊடகப்பிரிவு-

 

 

 

 

 

Related posts

அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த விளக்கமறியலில்

வினாத்தாள் கசிந்த விவகாரம் – ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்

editor