மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (02) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது.
இக்கூட்டத்தில் விஷேட அதிதியாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க கலந்துகொண்டார்.
இதன்போது, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் ஊடக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ரூபா. 450 மில்லியன் கிராமிய வீதி அபிவிருத்திக்திக்கும், மேலதிகமாக ரூபா 250 மில்லியன் இந்த வருடத்திற்குள் செலவு செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்தார்.
1 – கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதான வீதியில் சனநெரிசல் மிக்க சா சந்தியிலௌ வீதி சமிக்கை விளக்கு அமைத்தல்.
2 – ஏறாவூர் பஸ் டிப்போவிற்கான நிருவாகம் கட்டிடம் அமைத்தல்.
3 – மூடப்பட்ட றிஜிதென்ன பஸ் டிப்போவினை மீள திறத்தல்.
4 – காத்தான்குடி பிரதேசத்தில் இயங்காமல் இருக்கின்ற வீதி சமிக்கை விளக்கு தொகுதியினை இயங்க வைத்தல்.
5 – முன்னைய அரசில் ஐ வீதி திட்டதில் முடிக்கப்படாத வீதிகளை இணம்கண்டு, தற்போதை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் T5 வேலைத்திட்டத்தில் உள்வாங்கி, மட்டக்களப்பு மாவட்டத்தில் புணரமைக்கப்படாத அனைத்து வீதிகளையும் T5 திட்டத்தில்உள்வாங்குதல்.
6 – மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய இலங்கை போக்குவரத்து சபையில் நவீன புதிய பஸ்கள் பாவனையில் இல்லாமல் இருப்பதால் புதிய பஸ்களை வழங்குதல்.
7 – மட்டக்களப்பு – கொழும்பு பிரதான புகையிரத பெட்டிகளிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்தல்.
8 – தற்போது நிறுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு – யாழ்பாணம் புகையிரத சேவையை மீள ஆரம்பித்தல்.
9 – வெளிநாட்டு சுற்றுலாப்பணிகள் பார்வையிட வரும் கல்லடி பாலத்தினை பாராமரித்தல்.
10 – வீதி அபிவிருத்தி அதிகார சபை பராமரிப்பிலுள்ள மின் விளக்குகளை மாற்றுதல்.
11 – ரத்மலான – மட்டக்களப்பு விமான சேவையை மீள ஆரம்பித்தல்.
போன்ற பல்வேறு முன்மொழிகள் முன்வைக்கப்பட்டதுடன் அனைத்தும் விடயங்ளுடம் விரிவாக பரிசீலிக்கப்பட்டு கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர், போக்குவரத்து அமைச்சில் செயலாளர், போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், அமைச்சின் உயர் அதிகாரிகள், முப்படை உயர் அதிகாரிகள் ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் திணைக்களங்கள் சார் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
-ஊடகப்பிரிவு