உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி திருமுருகள் வீதியில் அமைந்துள்ள பற்றைக்குள் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (26.09.2025) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தானர்.

பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து ஸ்த்தலத்திற்குச் சென்ற பொலிசார் சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் அவர்களுடைய உத்தரவுக்கமைய சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்கான திடீர்மரண விராணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைப்புமாறு உத்தரவிட்டார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடி திருமுருகன் கோயில் வீதியைச் சேரந்த 2 பிள்ளைகளின் தந்தையான 71 வயதுடைய கணபதிப்பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-ஸோபிதன் சதானந்தம்

Related posts

பெதும் கெர்னருக்கு பிணை

மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே கையொப்பம்

´ஒசுசல´ மருந்தகங்களும் திறப்பு