நாடளாவிய ரீதியில் ஆன தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பிரயாணிகளின் வருகைக்காக க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஊடாக கரையோர கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலமையில் ஆரையம்பதி கடற்கரையில் இன்று அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது.
நட்புக்கு உயிர்கொடுப்போம் அமைப்பின் ராஜேஷ்வரன் யோகேஷ்குமார், மண்முனைப்பற்று உதவிப்பிரதேசெயலாளர் பார்த்தீபன், மண்முனைப்பற்று பிரதேசசபையின் உதவித்தவிசாளர் மற்றும், பிரதேசசபையின் செயலாளர் மற்றும் பிரதேசசபையின் உறுப்பினர்கள், கிராம உத்தியோகஸ்தர், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
-ஸோபிதன் சதானந்தம்