உள்நாடு

மட்டக்களப்பில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

(UTVNEWS | BATTICALOA) – மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்களின் வீடுகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (03) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.எம் அச்சுதன் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வேலைகளுக்காக சென்று திரும்பிய 1011 பேர்களும் அத்தோடு மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலைகள் நிமிர்த்தமாகவும் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வந்தவர்களுமாக 1351 பேர்களும் மொத்தம் 2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

முன்பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை

மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பரிசளிப்பு!

editor

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் இலங்கைக்கான ஆஸ்திரியத் தூதுவர்

editor