அரசியல்உள்நாடு

மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுரவை வரவேற்கும் பதாகைகளை அகற்றிய பொலிஸார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முதல் தடவையாக எதிர்வரும் சனிக்கிழமை (12) மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் வருகையை அறிவிக்கும் பதாகைகள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் மாவட்ட தேர்தல் கண்காணிப்பு குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது எனும் அடிப்படையில் புதன்கிழமை (09) இரவு மாவட்ட பொலிஸாரினால் பதாகைகள அகற்றும் பணிணகள் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.சுபியான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மாவட்ட செயலக தேர்தல் கண்காணிப்பு குழு உயர் அதிகாரிகளும் குறித்த இடத்துக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய அஸ்வெசும விண்ணப்பங்கள் இன்று முதல்!

மாவை ஐயாவின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலில் நிரப்ப முடியாத வெற்றிடம் – யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் இரங்கல்

editor

இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று முதல் ஆரம்பம்