கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகரில் கொட்டப்படும் திண்மக்கழிவுகளை வேறு இடமொன்றிற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தெரிவித்தார்.
குறித்த இடம் குறுகிய நிலப்பரப்பில் காணப்படுவதால் அப்பகுதி விவசாய நிலங்களுக்கும், கொவிட் மையவாடிக்கு வரும் நபர்களுக்கும் பாரிய நெருக்கடியாகவுள்ளது.
அத்தோடு, திண்மக் கழிவுகள் கொட்டப்படும் குப்பை மேட்டுக்கு வரும் யானைகளினால் பெரும் அச்சுறுத்தலும் ஏற்படுகின்றது.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட வன பரிபாலன சபை பராமரிப்பிலுள்ள பத்து ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டு பெறப்பட்டுள்ளது.
மிக விரைவில் திண்மக்கழிவு கொட்டும் நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்படும் என தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தெரிவித்தார்.
-எச்.எம்.எம்.பர்ஸான்