உலகம்

மக்கா, மதீனாவில் ரமலான் தொழுகை 10 ரக்காத்!!

இரு புனித பள்ளிவாசல்களின் விவகாரங்களுக்கான பொதுத் தலைமைத்துவம், வரவிருக்கும் ரமழான் 1447 ஹிஜ்ரி (2026) மாதத்தில் நடைபெறவுள்ள இரவு தராவீஹ் தொழுகையின் அமைப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவி ஆகிய இரு புனித பள்ளிவாசல்களிலும், தராவீஹ் தொழுகை மொத்தம் 10 ரக்அத்துகளாக நடைபெறும்.

தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து, 3 ரக்அத்துகள் கொண்ட வித்ர் தொழுகை நிறைவேற்றப்படும்.

இதன்படி, தொழுகை முழுவதிலும் மொத்தம் 5 முறை தஸ்லீம் வழங்கப்படும் நிலையில், இறுதியில் வித்ர் தொழுகையுடன் இரவு தொழுகை நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

வர்த்தக நாமத்தை ‘Meta’ என மாற்றியமைத்தது ‘Facebook’ நிறுவனம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 வருடங்களும் மனைவிக்கு 7 வருடங்களும் சிறைத்தண்டனை

editor