சூடான செய்திகள் 1

மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா நியமனம்…

(UTV|COLOMBO)-மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியான இவர், இலங்கை திட்டமிடல் சேவை பிரிவின் முதல் தர அதிகாரியாவார்.

கடந்த 30 வருடங்களாக அரச சேவையில் அனுபவமிக்கவரான சுஜாதா துறைமுகங்கள் மற்றும் பெருற்தெருக்கள் அமைச்சின் செயலாளர், நிதியமைச்சின் திறைசேறி பிரதி செயலாளர்,வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் பல தனியார் மற்றும் அரச வங்கிகள், இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு,  காப்புறுதி சபை, இலங்கை முதலீட்டு சபை , இலங்கை சுற்றுலா சபை பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும்,  கடமையாற்றியுள்ளார்.

 

 

 

 

Related posts

வடமேல் மாகாணத்திற்கு மொரகஹகந்த மற்றும் மகாவலி நீரை கொண்டுசெல்லும் திட்டப்பணிகள் ஆரம்பம்

இந்திய முப்படை வீரர்கள் மலையகத்துக்கு விஜயம்

சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி இடையே இன்று(29) மாலை சந்திப்பு