அரசியல்உள்நாடு

மக்கள் மத்தியில் மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது – சட்டத்தரணி அன்ஸில்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதென அக் கட்சியின் பிரதி செயலாளர் நாயகம் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சட்டத்தரணி அன்ஸில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு நாங்கள் போட்டியிட்ட போது ஒரு வட்டாரத்தை வெற்றி கொண்டதுடன் இரண்டு பட்டியல் ஆசனங்களும் கிடைத்தது.

ஆனால் இம்முறை எமது கட்சி இரண்டு வட்டாரங்களை வெற்றி பெறும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கொண்டதுடன் இரண்டு பட்டியல் ஆசனங்களும் கிடைத்துள்ளது.

கடந்த முறை வட்டாரங்களில் பெற்ற வாக்குகளை விட இம்முறை சுமார் 50 வீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை மீதும் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தியமே இதற்கு காரணமாகும்

வாக்களித்த மக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

நேர்மையாக எமது சமூகப் பயணம் தொடரும் என மேலும் தெரிவித்தார் பிரதி செயலாளர் நாயகம் சட்டத்தரணி அன்ஸில்

Related posts

ஜனாதிபதி விரைவில் சீனா விஜயம்

வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படுவது தொடர்பில் அவசர அறிவிப்பு

editor

கல்முனை மாநகர சபையில் சேவை நலன் பாராட்டு விழா.!

editor