அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மக்கள் நிராகரித்த எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை – டில்வின் சில்வா

மக்கள் நிராகரித்த எந்தவொரு கட்சியுடனும் கூட்டணியை அமைத்து, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு இல்லையென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஊழல் இல்லாத தேசிய சீர்திருத்த திட்டத்தை தொடர ஒரு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தனி ஒரு கட்சியாக தேசிய மக்கள் சக்தி தெளிவான மற்றும் முன்னணி வெற்றியைப் பெற்றுள்ளது. இது சிறப்பு வாய்ந்தது.

அதிகாரங்களை நிறுவுவதற்கு சுயாதீன குழுக்களுடன் இணைந்து செயல்பட தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

ஆனால் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காது. முன்னணி கட்சியாக, எங்களுக்கு ஆட்சி செய்ய உரிமை உண்டு.

தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சுற்றிவளைப்பில் ஒரு தொகை தரமற்ற ஒக்ஸிமீட்டர் கண்டுபிடிப்பு

கஞ்சிபான இம்ரானின் விளக்கமறியல் நீடிப்பு

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் மின்சார சபையின் கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது