அரசியல்உள்நாடு

மக்கள் காங்கிரஸினால் சம்மாந்துறை வலய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு – ரிஷாட் பதியுதீனால் கெளரவம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், சம்மாந்துறை வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில், உயர்தர பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (10) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில், பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹீர், சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் மஹேந்திரகுமார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா, கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளருமான ஓய்வுபெற்ற ஆசிரியர் காதர், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் இதன் போது கலந்துகொண்டனர்.

சம்மாந்துறை வலயத்திற்குற்பட்ட சம்மாந்துறை, இறக்காமம், வரிப்பதான்சேனை பிரதேச பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இதன் போது கெளரவிக்கப்பட்டனர்.

Related posts

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட வந்த அம்பாறை மாணவர்கள்

editor

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல்