உள்நாடு

மக்கள் அலட்சியமாக இருந்தால் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறையாகும்

(UTV | கொழும்பு) – நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்றுமாறு இராணுவ தளபதியும் தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் மக்கள் தம் பொறுப்புக்களில் இருந்து தவறினால் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“.. இலங்கையில் நாளாந்தக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் நேற்றுமுன்தினம் 1,900 ஐத் தாண்டியுள்ளது. இதேவேளை, நேற்று 2,300 இற்கும் மேற்பட்ட கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

இவர்கள் அனைவரும் புத்தாண்டுக் கொரோனாக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தமையால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.

எனவே, மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். இல்லையேல் நாட்டில் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி வரும் ..”

மேலும் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொதுமக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் எனவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

 

Related posts

இயக்கச்சி வெடிப்பு சம்பவம் – காயமடைந்த நபர் உயிரிழப்பு

ரூ.5000 இதுவரை வழங்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு

 கொழும்பில் சில பகுதிகளில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு