அரசியல்உள்நாடு

மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ஒரு சிலரின் அரசியல் தேவைக்காக மூடப்பட்ட காவத்தை அவுப்பை பிரஜாசக்தி நிலையத்தை அபிவிருத்தி செய்து அதை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி அமைச்சின் மூலம் 27 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

காவத்தை அவுப்பை தலுகலை பிரிவில் நேற்றையதினம் (27) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் பிரதீப் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

மலையகப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி அமைச்சின் மூலம் இம்முறை கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் பணிகளி யாவும் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

இன்று நாட்டில் பாரிய அரசியல் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. விவசாயின் மகன் இன்று நாட்டில் ஜனாதிபதியாக இருக்கின்றார்.
எனவேதான் இம்முறை வரவு செலவு திட்டத்தில் கிராமப்புரங்களுக்கு கூடுதலதன நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத்திற்கும் இம்முறை கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர வந்து ஆறு மாதம் ஆகிவிட்டது. புதிய பாரளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு நான்கு மாதம் ஆகிவிட்டது. என்ன செய்தார்கள் என்று சிலர் கேள்வி கேட்கின்றார்கள்.

நாங்கள் மக்களுடைய பணத்தை மிகுதி படுத்தி உள்ளோம்.
கடந்த கால ஆட்சியில் பிரதி அமைச்சர் ஒருவர் மலையகப் பிரதேசத்திற்கு வருகை தந்தால் அவர் பின்னால் எத்தனை வாகனங்கள் வந்திருக்கும் அது மட்டுமல்ல எத்தனை பொலிசார்கள் அவரின் பின்னால் வந்திருப்பார்கள். இவை அனைத்தும் யாருடைய பணம் இவை பொது மக்களின் பணம். இதை இல்லாமல் செய்யவே மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள்.

கடந்தகால ஆட்சியில் மலையக தோட்ட மக்களுக்கு அஸ்வெஸ்ம தொகை முறையாக கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல மலையக தோட்டப்பகுதிகளில் அஸ்வெஸ்ம தேர்வு முறையக இடம்பெறவில்லை.

இன்று எமது அரசாங்கம் அஸ்வெஸ்ம தொகையை அதிகரித்தள்ளது. அஸ்வெஸ்ம இல்லாதவர்களுக்கு அஸ்வெஸம வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புதிதாக மூன்று இலட்சம் பேருக்கு அஸ்வெஸ்ம வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் மூலம் மலையக மக்களுக்கு பத்தாயிரம் வீடுத்திட்டம் வழங்கப்பட்டது. அதில் 1500 வீடுகள் மாத்திரமே கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் அமைத்து கொடுத்துள்ளது. நாங்கள் இந்த வருடம் 5700 வீடுகளை மலையக மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

மலையக மக்களுக்கு அமைக்கபட உள்ள வீடு தனி வீடா, மாடி வீடா, கோடி வீடா என்று சிலர் கேள்வி கேட்கின்றார்கள்.
அவர்களுக்கு செய்ய முடியாததை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். இது அவர்களுக்கு கொஞ்சம் வருத்தமாகதான் இருக்கும். மலைய மக்களுக்கு தனி வீடுதான் அமைத்து கொடுக்கப்படும்.

மலையக மக்களுக்கு பத்து பேர்சஸ் காணி உரிமை வழங்கவும் அரசாங்கம் தீர்மாணித்தள்ளது.
இன்று சில தோட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறு கைவிடப்பட்டுள்ள தோட்டப்பகுதிகள் குறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட தோட்ட கம்பனியுடன் கலந்துரையாடி ஒரு தொழிலாளருக்கு இரண்டு ஏக்கர் காணியை பயிர் செய்வதற்காக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அத்துடன் மலையக இளைஞர் யுவதிகளின் தொழில் பயிற்சிக்காக 580 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட மலையக அரசியல்வாதிகளுக்கு பயம் வந்து விட்டது. திருடர்களுக்கு பயம் வந்த படியால்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்த்தை அவதூறு செய்கின்றார்கள்.
விரைவில் எல்லா திருடர்களும் உள்ளே செல்வார்கள்.

இந்த நாட்டில் மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு மண்ணிப்பு வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்படும் என்று பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மேலும் தெரிவித்தார்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் வருவதில் தாமதமில்லை

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டுமா? பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட ஜனாதிபதி.

மட்டக்களப்பில் நாளை முதல் பொதுச் சந்தைகளுக்கு பூட்டு