உள்நாடு

மக்களிடம் பலவந்தமாக பணம் வசூலித்த 11 பேர் கைது!

(UTV | கொழும்பு) –

நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் திணைக்களத்திற்கு அருகில் மக்களிடம் பலவித அழுத்தங்களை பிரயோகித்து பணம் வசூலித்த பெண்ணொருவர் உட்பட 11 பேர் பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜனக பிரியதர்சன விதானகேவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும், அவர்கள் போதை பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பணம் தேடும் நோக்கில் குறித்த இடத்தில் தங்கியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாரஹேன்பிட்டி நகரத்திற்கு அருகில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி – விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி அநுர

editor

பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்

2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்