உள்நாடு

மகேஷ் கம்மன்பிலவிற்கு பிணை

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அரசாங்கத்தின் போது, ​​சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உர கப்பலை நாட்டுக்கு கொண்டு வந்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Related posts

மது விற்பனையில் வீழ்ச்சி

கொவிட் தொற்றாளர்களுக்கு இன்று முதல் புதிய முறைமை

மஹிந்த, மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு!