வகைப்படுத்தப்படாத

மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினம் இன்று…

(UTV|INDIA)-மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, இன்று டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, அகிம்சை வழியில் போராடியவர் மகாத்மா காந்தி.

அவரது பிறந்தநாளான ஒக்டோபர் 2ஆம் திகதி, காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இன்று (02) காலை பிரதமர் மோடி காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இரண்டு வாரங்களுக்குள் அரசியல், பொருளாதார ரீதியான முக்கிய தீர்மானங்கள்

நேபாள ஜனாதிபதி நாளை இலங்கை விஜயம்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிவர முயன்றவர் கைது