உள்நாடு

மகளின் முகத்தில் ரைஸ் குக்கர் மூடியால் சூடு வைத்த தந்தை

(UTV | கொழும்பு) –  மகளின் முகத்தில் ரைஸ் குக்கர் மூடியால் சூடு வைத்த தந்தை

16 வயதுடைய மகளின் முகத்தில் ரைஸ் குக்கரின் மூடியால் தந்தையொருவர் சூடு வைத்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பின்வத்தை வடுபாசல் தோட்டம் பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி ஒருவர் தனது தாயுடன் வந்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

தீக்காயங்களுடன் சிறுமி நேற்று (05) இரவு தனது தாயுடன் பொலிஸில் முறைப்பாடு செய்து பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அன்று இரவு சிறுமி வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது, சந்தேக நபர் இரவு 7.45 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, ​​சிறுமியின் தாய் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

சந்தேகநபர் ரைஸ் குக்கரின் மூடியைத் திறந்து, “ஏன் இவ்வளவு சாதம் சமைக்கிறாய்?” எனக் கூறி ரைஸ் குக்கரின் மூடியை சிறுமியின் முகத்தில் வைத்துள்ளதாக சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முகம் மற்றும் கன்னங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

சம்பவம் தொடர்பில் பின்வத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அநுராதபுரத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபருக்கு தடுப்பு காவல்

editor

ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகம் நியமனம்

editor

செம்மணியில் புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

editor