கேகாலையில் தேவாலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படுவத்த பகுதியில் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (19) இரவு இடம்பெற்றுள்ளது.
படுவத்த – ஹலமட பகுதியை சேர்நதத 35 வயதுடைய மகனே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மனைவி கோகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தந்தை தனது மகன் மற்றும் மனைவியை பொல்லால் தாக்கியதால் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தேவாலேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.