அரசியல்உள்நாடு

போலி வாக்குறுதிகளை வழங்கியே NPP வாக்குகளைப் பறித்தது – பழனி திகாம்பரம் எம்.பி

போலி வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி வாக்குகளைப் பறித்துள்ளது.

எனவே, நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை தமிழ் முற்போக்கு கூட்டணி அணியே வெற்றிபெறும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான முதலாவது பிரச்சார கூட்டம் கொட்டகலையில் இடம்பெற்றது.

இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய அவர்,

“உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். தேசிய மக்கள் சக்தி பொய்யான வாக்குறுதிகளை வழங்கியே வாக்குகளைப் பறித்தனர்.

ஐஎம்எப் விதிகள் மாற்றப்படும் என்றனர், அரிசி மாபியா நிறுத்தப்படும், இறக்குமதி செய்யப்படமாட்டாது எனவும் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை. மறுபுறத்தில் அபிவிருத்தி திட்டங்களும் இடம்பெறவில்லை.

மலையகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் பகுதி இந்திய நிதியாகும்.

நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் எகிறி வருகின்றன. தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் இல்லை.

வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடரின் இறுதி நாளன்று ஜனாதிபதி நீண்டநேரம் உரையாற்றினார். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றி எதுவும் கூறவில்லை.” – என்றார்.

-கிரிஷாந்தன்

Related posts

முக கவசத்திற்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

புத்தளத்திலிருந்து கல்கிசைக்கு பயணித்த ரயிலின் கழிப்பறையில் இருந்து பெண் சிசுவின் சடலம் கண்டுபிடிப்பு

editor

மாடியில் இருந்து விழுந்த சிறுவன் படுகாயம்