உள்நாடு

போலி பிரித்தானிய கடவுச்சீட்டுடன் ஈரானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

போலியான பிரித்தானிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு பயணிக்க முயன்ற ஈரானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய ஈரானிய நாட்டவர் நேற்று (19) இரவு 8 மணியளவில் ஜப்பானில் உள்ள நரிட்டா விமான நிலையம் நோக்கி புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அவர் வழங்கிய பிரித்தானிய கடவுச்சீட்டில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அது போலியானது என்பது தெரியவந்தது.

சந்தேக நபரின் பொருட்களை சோதனைக்கு உட்படுத்திய போது, அவரது உண்மையான ஈரானிய கடவுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஈரானிய நாட்டவர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இந்திய நிதியில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி – நிசாம் காரியப்பர் எம்.பி நடவடிக்கை

editor

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு

editor

பல பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்