உள்நாடுபிராந்தியம்

போலி நாணயத்தாள்களுடன் 52 வயதுடைய பெண் ஒருவர் கைது

மொரட்டுவை நகரில் போலி நாணயத்தாள்களுடன் 52 வயது பெண் ஒருவரை மொரட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (14) மாலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில், மொரட்டுவை, ராவதாவத்தையைச் சேர்ந்த சந்தேக நபரிடமிருந்து 10 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.

விசாரணையில், சந்தேக நபரின் வீட்டிலிருந்து போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம், 25 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள், 08 போலி 1,000 ரூபாய் நாணயத்தாள்கள், ஒரு போலி 100 ரூபாய் நாணயத்தாள் மற்றும் 02 போலி 20 ரூபாய் நாணயத்தாள்கள் மீட்கப்பட்டன.

மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கிரியெல்ல மத்திய மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு நிகழ்வு – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன பங்கேற்பு

editor

அதிகாரிகளுடனான குழு கூட்டத்திற்கு சஜித்திற்கு தடை : தனியாக அழைக்க அதிகாரம்

திங்கள் முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க அனுமதி