உள்நாடுபிராந்தியம்

போலி இலக்கத் தகடுடன் காரை ஓட்டிச் சென்ற பெண் டாக்டர் கைது!

போலி இலக்கத் தகடுடன் காரை ஓட்டிச் சென்ற பெண் மருத்துவர் ஒருவர் நேற்று முன்தினம் (02) கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டார்.

அந்த மருத்துவர் பேராதனையில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க மருத்துவமனையில் பணிபு ரிவதாக பொலிஸார. தெரிவித்தனர்.

கண்டி-பேராதனை வீதியில் உள்ள சுமையா கார்டன் பைபாஸில் வைத்து கார் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டதாக பொலிஸார. தெரிவித்தனர்.

சந்தேக நபரின் கணவரும் அதே மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

விசாரணையின்போது கார் தனது கணவருடையது என்று அவர் கூறினார்.

இது குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆடைத் துறையினருடனான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்

editor

ஆபத்தான விதத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேருந்து!

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டப் பிரதானிகளுடன் கலந்துரையாடல்

editor