உள்நாடுபிராந்தியம்

போதை மாத்திரைகளுடன் 37 வயதுடைய பெண் கைது!

குருணாகல் – வாரியப்பொல, வலஸ்பிட்டிய வத்த பகுதியில் போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் மாவத்தகம பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் புத்தளம், முந்தல் பகுதியில் வசிக்கும் 37 வயதுடைய ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் ஆவார்.

சந்தேக நபரான பெண்ணிடமிருந்து 9657 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

அவசரமாக கூடவுள்ள பாராளுமன்றம்!

editor

தலைமை பயிற்சியாளராக சாமர சில்வா நியமனம்

editor