உள்நாடு

போதை மாத்திரைகளுடன் 31 வயது பெண்ணொருவர் கைது

5 லட்சத்திற்கும் அதிகளவு பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கல்கிஸ்ஸை குற்றத்தடுப்பு பிரிவால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 5,000 போதை மாத்திரைகளும் அந்த வர்த்தகத்தில் இருந்து ஈட்டிய 134,000 ரூபாய் பணமும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தெஹிவளையில் இரண்டு மாடி வீட்டில் வசிக்கும் பெண்ணொருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாகக் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது, வீட்டின் ஒரு அறையில் உள்ள அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னரும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண், அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கல்கிஸ்ஸை குற்றத் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

இன்று எரிபொருள் விலை திருத்தம் ?

editor

புதிய பதவி ஏற்க வந்தவர் மீது துப்பாக்கி சூடு

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது