சூடான செய்திகள் 1

போதைப் பொருளுக்கு எதிராக அடுத்த வாரம் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி..

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் 31ம் தகதி போதைப் பொருளுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

மேற்படி ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பில் நடத்தப்படவுள்ளதுடன் நீர்கொழும்பு, ராகமை, துடல்ல ஆகிய பகுதிகளிலும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கிராண்ட்பாஸ் புனித சூசையப்பர் ஆலயம், வத்தளை, நாயக்ககந்தை ஆலயங்களிலிருந்தும் மக்கள் பேரணி மட்டக்குளி விஸ்வைக் பார்க் மைதானத்தில் ஒன்று கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரத்தை இறக்குமதி செய்ய தடை

பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டக்கல்வி – அமைச்சரவை அனுமதி

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்வு