உள்நாடுபிராந்தியம்

போதைப்பொருள் கடத்தியவர் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணை!

நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல் மஸ்ஹர் வீதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(2) 32 வயதுடைய குறித்த ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும்  போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 1000 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 750 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான குறித்த சந்தேக நபரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்பில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமாரவின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்ரமரத்ன மற்றும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் நேரடி வழிகாட்டலில் இயங்கும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின்  பொறுப்பதிகாரியும் உப  பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த சோதனையினை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

editor

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

editor

ரிஷாட் பதியுதீனின் அநியாய கைது – அடிப்படை உரிமைகள் மனு வழக்குக்கு திகதி அறிவிப்பு

editor