உள்நாடு

போதைப்பொருளுடன் மூவர் கைது

(UTV|கொழும்பு) – புதுக்குடியிருப்பு பகுதியில் 6 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளி ஒன்றையும் காவல்துறையினர் இதன்போது பறிமுதல் செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி சுமர் எட்டு இலட்சம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

Related posts

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பகிரங்க சவால் விடுத்த சஜித்.

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான அறிவித்தல் – வர்த்தமானி வெளியீடு

editor