உள்நாடு

போதைப்பொருட்களுடன் சிக்கிய படகுகள் – 11 பேர் கைது

தெற்கு கடற்பரப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகளும் 11 சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸாரிடம் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, நீண்ட தூர ரோந்து கப்பல்களைப் பயன்படுத்தி இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது ஒரு நெடுநாள் மீன்பிடிப் படகுடன் ஐந்து சந்தேகநபர்களும், மற்றைய நெடுநாள் மீன்பிடிப் படகுடன் ஆறு சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் உள்ளதாக சந்தேகிக்கப்படும் பைகள், இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டு வந்துகொண்டிருப்பதாக கடற்படை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

சீன வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கு

இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்திலிருந்து வெளியானார் ரஞ்சன் [UPDATE]

பிரதமரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி