உள்நாடு

போதியளவு எண்ணெய் கிடைக்குமாயின் இன்று மின் வெட்டு அமுலாகாது

(UTV | கொழும்பு) – தடையின்றிய மின் விநியோகத்திற்கு போதியளவு உலை எண்ணெய்யும், டீசலும் கிடைக்கப்பெறுமாயின், நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் வெட்டு அமுலாகாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபைக்கு போதுமான எண்ணெய்யைப் பெற்றுக் கொள்வதற்காக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்திருந்தார்.

இதன்படி, பெரும்பாலும் இன்றைய தினத்திற்குள் அவசியமான எண்ணெய் மின்சார சபைக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இந்திய பிரதமர் இலங்கை வருகை – கொழும்பில் மூடப்படும் வீதிகள் குறித்து பொலிஸார் வௌியிட்ட புதிய அறிக்கை

editor

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு

editor

சாணக்கியன் எம்.பியின் அலுவலகத்தில் முற்றுகை-100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பண மோசடியால் தஞ்சம்.