சூடான செய்திகள் 1

போக்குவரத்து சேவைகள் வழமைக்கு…

(UTV|COLOMBO) நேற்றைய தினம் மட்டுபடுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சேவைகள் ,இன்று காலை 6.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் பயணிக்கக்கூடிய வகையில் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்தார்.

அதேபோன்று இன்று காலை 6.00 மணி முதல் ரெயில் சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் மியன்மாரில் கைது (VIDEO)

வாகன ஹோர்ண்கள் வெளிச்ச சமிக்ஞைகளை அப்புறப்படுத்த கால அவகாசம்…

பொலிஸாரால் விடுதியொன்றில் வைத்து கடுமையான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட மாணவன்