உள்நாடுபிராந்தியம்

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

பொல்லால் தாக்கப்பட்ட நிலையில் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் (04) செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓமனியாமடு கிராமத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.

இருவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஓமனியாமடு கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 63 வயதுடைய செல்லையா சுந்தரலிங்கம் என்பவர் பலியாகியுள்ளார்.

மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தாக்கிய நபரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

சிறுபோகத்திற்காக பொட்டாசியம் குளோரைட் உர இறக்குமதிக்கு அனுமதி

சஜித்தை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம் – இராதாகிருஷ்ணன் எம்.பி

editor

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலுக்கு