உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ள புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் குறித்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 071 – 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் இன்று (13) முதல் செயல்படும்.

இந்த இலக்கம் ஊடாக நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், வீடியோக்கள் மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என்றும், அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக தங்கள் பிரச்சினைகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக தகவல்களை வழங்கு முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற குழுவானது பிரதமர் தலைமையில் கூடுகிறது

24 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து

2020 ஆம் ஆண்டில் மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பம்