உள்நாடு

பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள் ‎

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைக் குறித்து முறைப்பாடு செய்வதற்காக பொதுமக்களுக்காக வாட்ஸ் அப் எண் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் குறித்த வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளன.

பொலிஸ் அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டாலோ அல்லது சரியான சேவையை வழங்கவில்லை என்றாலோ 0718598888 குறித்த வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகள் அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

புதிய பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

Related posts

ஹர்த்தால், போராட்டங்கள் அவசியமற்றவை – சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம்

editor

ரிஷாத் பாராளுமன்றம் வருவதில் சட்டரீதியான தடைகள் இல்லை

இன்று இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

editor