சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு CID இற்கு அனுமதி

(UTVNEWS | COLOMBO) – நாரஹேன்பிட்டிய பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக் அனுமதி வழங்கியுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி செயற்பாட்டாளராக இருந்த பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவருக்கு 2017ம் ஆண்டு திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமை காரணமாக கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தற்போது நாரஹேன்பிட்டிய பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கையடக்கத் தொலைபேசிகளை இனங்காணுவதற்கு விசேட உபகரணம்

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

கொலைச் சந்தேகநபர் ஒருவர் கைது